இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

Sri Lanka Sri Lanka Anti-Govt Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Sivaa Mayuri Aug 23, 2022 06:21 AM GMT
Report

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் என்பது, போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பொருந்தாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஹஷந்த ஜவந்த குணதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தாழ்வு நிலை

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் | Sri Lanka Prevention Of Terrorism Act

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் ஒரு புதிய தாழ்வு நிலையாகும்.

ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை ஆயுதமாக்குவது என்பது, அதிகாரிகள் எந்த வித விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதற்கும், எதிர்ப்புக் குரல்களை எப்படித் திட்டமிட்டு ஒடுக்குகிறார்கள் என்பதற்கும் ஒரு சான்றாகும்.

இது சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு எதிரானது, குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தை மீறும் இலங்கை 

Amnesty International

போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பொருந்தாது. அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

இந்த சட்டத்தின் மூலம், குற்றஞ்சாட்டப்படாமல் ஒரு வருடம் வரை சந்தேக நபர்களை தடுத்து வைக்க முடியும். எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை மேலும் தடுத்து வைக்கும் உத்தரவில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திடக் கூடாது என்று யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.

கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டம்

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் | Sri Lanka Prevention Of Terrorism Act

பயங்கரவாத தடைச்சட்டம், இலங்கையில் துஷ்பிரயோகத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இதன் காரணமாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான ஒரு கருவியாக மீண்டும் மீண்டும் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையினரும், ஏனையோரும் இலங்கை அரசாங்கம் அமைதியான போராட்டங்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் சிறுபான்மையினர், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சனக் குரல்களைக் குறிவைத்து துன்புறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US