கஜேந்திரகுமாரை எதிர்த்து போராட்டம்! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கொழும்பு வீடு முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு போராட்டங்கள்
இந்நிலையிலேயே ஜனாதிபதி மேற்படிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"எங்கு பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றதோ அங்கு பொலிஸாரையும் படையினரையும் வரவழைத்துப் பாதுகாப்பை பலப்படுத்துவேன்.
தற்போது சில தரப்பினர் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகின்றனர். எம்.பிக்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
எனினும் எம்.பிக்களின் உயிர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கும் ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்."என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
