நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பெண்ணால் பரபரப்பு
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயந்திபுர பிரதான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய பெண்

கைது செய்யப்பட்ட பெண் எப்பாவல பிரதேசத்தில் வசிப்பவராகும். குறித்த பெண் ஏன் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

இந்த பெண் நேற்று காலை கடுமையான குழப்பத்துடன் ஜெயந்திபுர பிரதான நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வரவழைக்கப்பட்டு, அப்பெண்ணை அங்கிருந்து அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan