நாமல் குழுவினரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிய ஜனாதிபதி ரணில்
அமைச்சரவையை உடனடியாக நியமிக்காவிட்டால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சுறுத்த சென்ற பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
தேவை ஏற்படின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்குமாறும், தாம் விரும்பும் போதே அமைச்சரவை நியமிக்கிக்கப்படும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க இந்தக் குழு எவ்வாறு செயற்பட்டது என்பதை தான் அறிந்திருந்ததாக கூறிய ஜனாதிபதி, அவ்வாறே தொடர்ந்து செயற்பட முடியாது எனவும், தேவையென்றால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவிக்கு கடும் பிரயத்தனம்
22வது அரசியலமைப்புத் திருத்தத்தை புறக்கணித்து அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக போராடி வரும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் குழு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்துள்ளது.
உடனடியாக அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு மீண்டும் அறிவித்துள்ளனர். இல்லாவிட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் இந்த அழுத்தத்தின் கீழ் தோற்கடிக்கப்படலாம் என இக்குழு ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முழு அளவில் ஏற்பாடு செயதுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் அமைச்சரவையை நியமிக்குமாறும், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி நிலைமையை கட்டுப்படுத்துமாறும் அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, இவ்வாறு ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க முன்வந்ததும் இந்தக் குழுவே எனவும் தற்போது வந்து வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதாக அறிவித்ததில் ஆச்சரியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவைப்பட்டால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்குமாறும் ஜனாதிபதி இந்தக் குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை நியமிப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் மேலும் தீர்க்கப்பட வேண்டிய நெருக்கடியான பிரச்சினைகள் இருப்பதாகவும் மக்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் மக்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் போது அமைச்சரவையை நியமிப்பதாகவும், தான் விரும்பும் போது அதனை அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க விரும்பும் எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அடுத்ததாக தேர்தல் ஒன்று நடந்தாலும் அது பிரச்சினையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தேர்தல் நடத்தப்பட்டால் உறுப்பினர் பதவிகளை இழக்கப் போவது தான் அல்ல என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.