அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கினால் இந்த பதவி காலத்தில் தீர்வு! ஜனாதிபதி உறுதி
அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதி பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலவரம்
மேலும் நாடாளுமன்றம் வந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுயலாப அரசியலை கைவிட்டு மக்கள் நலன் கருதிச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறுகிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு தீர்வு காண்பது தனது நோக்கம் அல்ல என்றும், பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி மாநாடு சிறந்த களம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |