ரஞ்சன் ராமநாயக்கவினால் பிரதான கட்சிகளுக்கு இடையில் பனிப்போர்
ரஞ்சன் ராமநாயக்கவை தமது கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்ட உடனேயே, வெளிநாட்டு பணியார்களின் நலன் மற்றும் ஊக்குவிப்புக்கான தூதுவராக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால், நியமிக்கப்பட்டார்.
ரஞ்சனுக்கு போட்டி

தன்னார்வ சேவையாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அக்கட்சியிடம் இருந்து மேலும் கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக, கட்சி கூட்டத்தின் பிரதிநிதியாகவும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊழல் எதிர்ப்புப் படையின் பிரதானியாகவும் அவரை நியமிக்கவுள்ளதாக சஜித் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தக் கோரிக்கைகள் எதற்கும் ராமநாயக்க பதிலளிக்கவில்லை.
அரசியல் கட்சிகள் போட்டி

மக்கள் ஆணையை வழங்கிய உறுப்பினர் பதவிக்கு தாம் தகுதியானவர் எனவும் தாம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ராமநாயக்காவுக்கு இதுவரை அரசியலில் ஈடுபடுவதற்கான குடிமை உரிமை கிடைக்கவில்லை.
ரஞ்சன் ராமநாயக்கவினால் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமானால், ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய பிரஜா உரிமைகளை வழங்குமாறு பல தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.