அடுத்த ஜனாதிபதியாக மகிந்த யாப்பா! நிராகரித்த ரணில் - முடிவில் மாற்றம்
புதிய இணைப்பு
புதிய ஜனாதிபதியாக மகிந்த யாப்பா அபேவர்த்தனவை நியமிக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
Correction to my earlier tweet on consensus to ask PM and President to resign. No consensus as PM disagrees. Speaker however decided to write to President and PM to resign as per overwhelming request.
— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022
முதலாம் இணைப்பு
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.
At Speaker’s Residence urgent Party Leader’s meeting. Several other Leaders including PM, AKD and Sumanthiran participated via zoom. Decision to ask both President and PM to resign. Speaker to take over as temporary President according to constitution. pic.twitter.com/RyauaIvCei
— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
இன்று பிற்பகல் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜேவிபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.