ரணில் ஆட்சியின் அடக்குமுறை தொடர்பில் ஐ.நாவிற்கு பறந்த அறிக்கை

Geneva Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Chandramathi Sep 06, 2022 01:30 PM GMT
Report

அதிருப்தியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையை விபரிக்கும் அறிக்கை ஒன்றை, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ளது.

பாரிய கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நாட்டின் இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடரவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை

ரணில் ஆட்சியின் அடக்குமுறை தொடர்பில் ஐ.நாவிற்கு பறந்த அறிக்கை | Sri Lanka Political Crisis In Geneva Session

கோட்டாபய ராஜபக்சவை வெகுஜனப் போராட்டத்தின் மூலம் பதவியில் இருந்து அகற்றி பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க ஒரு மாத காலத்துக்கும் மேலாக பல கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட 11 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிணையில் விடுதலையாகியுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம், பயங்கரவாத சட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாலி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சின்னையா சிவரூபனின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியல் இடம் பெற்றுள்ளமை ஜேடிஎஸ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் பேரவை

ரணில் ஆட்சியின் அடக்குமுறை தொடர்பில் ஐ.நாவிற்கு பறந்த அறிக்கை | Sri Lanka Political Crisis In Geneva Session

இன்னும் ஒரு வாரத்தில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை நடத்தைகள் தொடர்பான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைக்க உள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அரசாங்கத்திற்கு பதிலளிக்க ஜெனீவா சென்றுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறும் முன் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க சர்வதேச தலையீட்டை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அனுமதிக்காது என தெரிவித்தார். 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US