வங்கிக் கட்டமைப்பே சரிந்து விடும் நிலை!
பொருளாதாரம் ஸ்திரமாகிவிட்டது எனக் கூறுவது பொய்யாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு சிபாரிசு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கணக்கை சமநிலைப்படுத்துவதால் சமூக வாழ்வின் பிரச்சினைகளை தீர்க்காது. வற் வருமானத்தை அதிகரிப்பதற்கே அவர்கள் சிபாரிசு செய்கின்றார்கள்.
வற் வரியின் ஊடாக சமூக வாழ்வின் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும்.
வங்கிக் கட்டமைப்பு நம்பிக்கையிலேயே தங்கியிருக்கின்றது. அது சரிவடையுமானால் வங்கிக் கட்டமைப்பே சரிவடைந்து விடும்.
அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்துவதற்கு இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் பொருளாதாரதக் கட்டமைப்பை சீரமைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.