நேபாளத்திற்கு நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை திட்டம்
பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேபாளத்திற்கு அனுப்பப்படும் நிவாரணக் குழுக்களில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் உள்ளடங்குவர் என அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் நிவாரணக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் எந்த வகையான குழுக்களை அனுப்புவது என்பது குறித்துத் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

. நிவாரணக் குழுக்களுடன் சேர்த்து, பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14