சற்றுமுன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் (Live)
நாடாளுமன்றம் இன்று (08.11.2022) காலை 09.30 மணிக்கு கூடியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, இந்த விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை, கலால் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவிப்புகள், நாணயச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் மூன்று விதிமுறைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri