சரத் வீரசேகர ஒரு குப்பை! கஜேந்திரகுமார் காட்டம் - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது புலமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழர்கள் ஒற்றையாட்சியை கோருகிறார்களா ? அல்லது சமஷ்டியாட்சி கோருகிறார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் மக்கள் வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசுக்கு சவால் விடுத்தார்.
யுத்த குற்றவாளியாக கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக செயற்படுகிறார்.
இவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார், நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்து தரகுறைவாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உலகில் எங்கும் இவ்வாறான தன்மை கிடையாது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,