நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை! இராஜாங்க அமைச்சர்களுக்கு 300 லீட்டர் எரிபொருள்
நாடு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது, இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனம், எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், வாகனத்திற்கு 300 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு மட்டும் தனிச் சலுகை

அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் அமைச்சர்களுக்கு மட்டும் அரசாங்கம் தன்னிச்சையாக சலுகை வழங்கி வருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தமது குழுவினர் நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளதாக பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களின் எதிர்பார்ப்பு அதுவாக இருந்தால், அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமது குழு செயல்படும்,
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித உணர்வும் கொண்டிருக்கவில்லை. மக்களின் விரக்தியும் கோபமும் மிகவும் நியாயமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 6 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri