இலங்கையில் அடுத்தடுத்து எரிபொருள் செயற்பாடுகளில் இறங்கும் சர்வதேச நாடுகள்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனம், இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் RM Parks நிறுவனம் தமது முன்பணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 பெட்ரோல் நிலையங்களை எடுத்து நடத்தும்.இலங்கையில் புதிய பெட்ரோல் கொட்டகைகளை நிர்மாணிப்பதற்கும் இயக்குவதற்கும் RM Parks நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச பெட்ரோலிய நிறுவனம்
இலங்கை சந்தையில் பிரவேசிக்கும் மூன்றாவது சர்வதேச பெற்றோலிய நிறுவனம் RM Parks எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் நீண்ட கால ஒப்பந்தத்திற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கும் RM Parks நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
சினோபெக்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடந்த மாதம் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள சீன பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், 2023ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் இலங்கை சந்தையில் நுழைந்தது.
சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் சொந்தமாக புதிய பெட்ரோல் நிலையங்களை உருவாக்கவும் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.