இலங்கையின் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு! - வெளியாகியுள்ள அறிவிப்பு
இலங்கையின் பணவீக்கம் (பொருட்களின் விலையேற்றத்தால் நாணய மதிப்பு குறைதல் மற்றும் நாட்டின் நாணயத்தின் வாங்கும் திறன் குறைதல்) ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், 2.1 ஆல் உயர்ந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது. இது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தை விட பணவீக்கம் அதிகரிப்பதற்கு வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருட்களின் விலை அதிகரிப்புகள் முக்கிய காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
