வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை
புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசா, ஜேர்மன் பிரஜையான கலாநிதி ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel) என்பவருக்கு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார்.
முதலீட்டுத் தொகை
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ளலாம் என 5 வருட வதிவிட விசா பெறுவதற்கு அமெரிக்க டொலர் 100,000(அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயம்) முதலீடு செய்ய வேண்டும்.
10 வருட வதிவிட விசா பெறுவதற்கு அமெரிக்க டொலர் 200,000 (அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயம்) முதலீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமது முதலீட்டுத் தொகையை வைப்புச் செய்வதற்காக, அங்கீகாரம் பெற்ற இலங்கையின் வங்கியில் விசா நிகழ்ச்சித் திட்டம் வெளிநாட்டு நாணயக் கணக்கு (VPFCA) ஒன்றைத் திறப்பது கட்டாயமாகும்.
இந்த புதிய விசா திட்டம், முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வாழ்வதற்கும், தங்கள் நிதியை முதலீடு செய்வதற்கும் ஒரு நேரடியான மற்றும் இலகுவான பாதையை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
