சீன மக்களின் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் இலங்கை அல்ல: - சரத் பொன்சேகா
சீனாவின் குப்பைகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று இலங்கையைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது. சீன மக்களின் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் இலங்கை அல்ல என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Field Marshal Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பிலும் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு விடயம் இன்று விவசாயிகள், விவசாய நிலத்தில் அல்ல வீதியில் நிற்கின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சீனாவின் குப்பைகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று இலங்கையைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது. சீன மக்களின் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் இலங்கை அல்ல.
சீனா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களின் தாளத்திற்கு எம்மால் ஆட முடியாது. அரசாங்கமும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் கௌரவத்தை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். இது இறையாண்மை உள்ள ஒரு நாடு. இவற்றைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.
சீன அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் வெட்கக்கேடான முறையில் செயற்படுகின்றது. இலங்கையில் ஒரு விசித்திரமான ஒரு விலங்கு இனம் வாழ்வதாகவே சீனத் தூதுவர் நினைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நாட்டிற்குப் பாதிப்பான
எந்த விடயத்திற்கும் நாம் இடமளிக்கப்போவது இல்லை. ஆகவே அவரது குப்பையுடனான
கப்பலை அவரது நாட்டிற்கே கொண்டு சென்று எங்கேயாவது இறக்கிக்கொள்ளுமாறு நாம்
கோரிக்கை விடுக்கின்றோம். எனத் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri