இலங்கை- இந்திய லெஜன்ட்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில்!
சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜண்ட்ஸ் அணியை இலங்கையின் லெஜண்ட்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி, தமது 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி
இஸான் ஜெயரட்ன 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கிரிஸ்மர் சண்டோகி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, தமது 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் என்.டினாரினே 63 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நுவன் குலசேகர 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்திய- இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள்

இதேவேளை மற்றொரு அரையிறுதியில் அவுஸ்திரேலியா லெஜண்ட்ஸை வீழ்த்திய இந்திய லெஜண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இதனையடுத்து இந்திய- இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் இன்று இறுதிப்போட்டியில்
சந்திக்கின்றன.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri