சுகாதார துறையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களின் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆரம்பநிலை சுகாதார சேவைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
எதிர்வரும் ஐந்து வருடங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவையை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பது சுகாதார அமைச்சின் நோக்கமாகும்.
தரவுகள் மற்றும் சுட்டிகளின் அடிப்படையில் சர்வதேச ரீதியில் இலங்கை முன்னேறிச் செல்லும் போது நாடடின் பொது சுகாதார தாதி உத்தியோகத்தர் சேவையும் பலமடைய வேண்டும்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி வேலைத்திட்டத்திற்குத் தேவையான
நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடப்படும்
என அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு