சர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல்! அரசாங்கத்திற்கான பங்கு குறித்து வெளியான தகவல்
இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும்.
சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும். நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது.
இந்த கல்லை இயலுமான வரை விரைவில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri