இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி : வெளியான அறிவிப்பு
2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி
எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், “ஆம் நிச்சயமாக ஏற்படும். எங்களது கணக்கீடுகளின்படி, 2028 - 2030இற்குள் நாடு மீண்டும் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடியை சந்திக்கும்.
ஏற்கனவே 7 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் செலுத்த சுமார் 27 பில்லியன் தேவைப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
