நாட்டின் உண்மை நிதி நிலையை மூடி மறைத்த மத்திய வங்கியின் ஆளுநர் : நாடாளுமன்றில் அறிவிப்பு
நாட்டின் நிதி நிலைமையின் உண்மையை மத்திய வங்கியின் ஆளுநர் மூடி மறைத்தார் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் கையிருப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். ஆனால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் ஒருபோதும் இந்த நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டின் நிதி நிலைமையின் உண்மையை அவர் மூடி மறைத்தார். நிதி நிலைமை தொடர்பில் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது கையிருப்பு எவ்வளவு இருக்கின்றது என்று கேட்டேன். 20 மில்லியன் டொலர்கள் இருப்பதாக கூறினார்.
அப்போதே நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்பதனை அறிந்துகொண்டோம். எனவே அவ்வாறான மத்திய வங்கி ஆளுநர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |