உலக அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை ரக்பி சம்மேளனம்
இலங்கை ரக்பியானது உலக ரக்பி விதிகளை மீறும் வகையில் காணப்படுவதால் உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பவையே இந்த இடைநிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக உலக ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.
எனினும் உலக ரக்பி பேரவை, ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.

பங்குதாரர்களுடன் இணைதல்
நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.
இந்நிலையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.
உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri