இலங்கையில் சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு முக்கிய தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பல வரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புதிய வரிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சினால் வெளியிடப்பட உள்ளது.
புதிய வரி
புதிய வரிக்கமைய, மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து நாற்பத்தாயிரம் ரூபா வரை சம்பளம் பெறுவோருக்கு 6 சதவீதத்தினால் வரி விதிக்கப்படவுள்ளத. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகளவு சம்பளம் பெறுவோருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது.
14 வீதமாக அதிகரிப்பு
இதற்கு முன்னர் மாதாந்தம் 250,000 சம்பளம் பெற்றவர்களிடம் இருந்து இந்த வரி அறவிடப்பட்டது. தற்போது 14 சதவீத வரி விதிக்கப்படுட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏற்றுமதி துறைகள் தொடர்பான வணிகங்களுக்கான வருமான வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.