எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது: சுப்ரமணியன்

M K Stalin Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Thileepan Jun 02, 2022 11:27 AM GMT
Report

"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது" என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் என்.வி. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில்  நேற்றைய தினம்  சமகால விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது: சுப்ரமணியன் | Sri Lanka Economic Crisis India S Assistance

"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இதற்கமைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் நிவாரண பொதிகளை அனுப்பி நாட்டிற்கு மிகப்பெரிய உதவினை செய்து மீட்டு இருக்கிறார். இந்த விடயத்திற்கு நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்."

இழுவைப் படகு விவகாரம்

எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது: சுப்ரமணியன் | Sri Lanka Economic Crisis India S Assistance

"இலங்கை-இந்திய சட்ட விரோதமான இழுவைப் படகு தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே இதனை தீர்த்து தருமாறு இலங்கையின் வடக்கு, கிழக்கு கடற்தொழிலாளர்கள், தமிழக பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம்.

இதற்கமைய நாம் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டார்லின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார்."

கச்சத்தீவு

"கச்சத்தீவினை மீள பெறுவதனாலோ இழுவை மடி தொழிலுக்கு பரிகாரமாக அமையாது. இழுவை மடி தொழிலுக்கும்,கச்சத்தீவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.

இதற்கு மாறாக எங்கள் எல்லையினை தாண்டி கெடுதல் செய்வதற்கு வழிவகைக்கும் நோக்கிலே கச்சத்தீவினை மீட்டு தருமாறு ஸ்டாலின் கேட்டு இருக்கிறார்.

இந்த விடயமானது ஒரு நாடு சார்ந்த நாட்டு மக்கள் சார்ந்த தன்னியச்சையான, வட பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களை புறம் தள்ளுகின்ற கருத்தினை வைத்திருப்பது என்பது எங்களுக்கு ஏமாற்றத்தினையும் வியப்பினையும் தந்திருக்கிறது.

எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது: சுப்ரமணியன் | Sri Lanka Economic Crisis India S Assistance

இந்திரகாந்தி –ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நடைபெற்ற பேசசுவார்த்தையின் அடிப்படையில் கச்சத்தீவு வழங்கப்பட்டிருந்தது . இலங்கை நாட்டின் இன்னும் பல பிரதேசங்களை கையகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயற்பாடுகளை செய்கிறார்களா ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

எனவே தமிழக முதலமைச்சர் இழுவைமடி தொழிலுக்கான முயற்சியாக கச்சத்தீவு விவாதத்தினை கைவிட்டு எங்களுக்கு இருக்கின்ற இழுவைமடி தொழில் பிரச்சினைகளை நிறுத்துவதற்குரிய முயற்சியினை எடுப்பது வரவேற்கத்தக்கது.

இலங்கையின் அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு போன்ற 3 தீவுகள் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு இருக்கின்றன. அத்தீவுகளிலே நிவாரணப்பொருளான மண்ணெண்ணையினை கொடுத்து கவர்ச்சியை ஏற்படுத்தி வசமாக்கின்ற வேலையினையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்” என்றார்.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US