கோட்டாபய, மகிந்தவுக்கு எதிராக சதி முயற்சி என்கிறார் உதயங்க வீரதுங்க! காப்பாற்ற களமிறங்கும் முக்கிய பிரபலம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்காக அலரி மாளிகைக்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தானும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இன்று காலை 9.00 மணிக்கு அலரி மாளிகைக்கு வருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“அன்று நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து தம்மை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த சகோதரரை, பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்க மாட்டார். ஜென்ம ஜென்மத்திற்கும் பின் தொடர்ந்து வரும் பாவச் செயலை நன்கு அறிந்த கோட்டாபய, பிரதமரை நீக்க மாட்டார் என்பது எனக்கு நம்பிக்கை. ஆனால், கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக இன்னொரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக நாம் அறிவோம்.
ஜனாதிபதியையும் பாதுகாத்து நாட்டையும் தேசத்தையும் விழித்தெழ வைத்த பொது மக்களின் தலைவர் இதயபூர்வமாக பாதுகாப்பதற்கு இன்று காலை 9 மணிக்கு அலரி மாளிக்கைக்கு வருவோம்” என அவர் பதிவிட்டுள்ளார்.