நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த ஜனாதிபதி ரணில்
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தலைநகரில் மட்டுமன்றி அனைத்து நகர்ப்புறங்களிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிராமிய மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வீடுகளை வழங்குவதில் தகுதியான நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாளைய தினம் 36 ஆவது உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam