திடீரென விலையை உயர்த்தும் வியாபாரிகள்! நல்ல அறிகுறி குறித்து அமைச்சரின் அறிவிப்பு
ஒருமுறை பொருட்களின் விலையைக் கூட்டியவுடன் வியாபாரிகள் திடீரென விலையை உயர்த்துகிறார்கள். ஆனால் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் போது அந்த நன்மையை நுகர்வோருக்கு அவர்கள் வழங்குவதில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வியாபாரிகளின் இந்த நடவடிக்கை அனைவரும் அறிந்த உண்மை. இதுதான் நாட்டின் பொதுவான நிலை.
பணவீக்கம் குறைந்து வருகின்றது
நுகர்வோருக்கு இந்த சலுகைகளை வழங்குமாறு விற்பனையாளர்கள் மற்றம் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். இல்லையெனில், மக்களுக்கு பலன் கிடைக்காது.
மறுபுறம், கடந்த இரண்டு வாரங்களில் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் குறைந்து வருகின்றது. இது ஒரு நல்ல அறிகுறி.
ஆனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அந்த நன்மையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.