கடற்படையினர் மற்றும் விமானப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம்
இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப் படையினருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எரிபொருள் வழங்க உள்ளது.
சுமார் 250000 லீட்டர் எரிபொருள் இவ்வாறு வழங்கப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்கும் நோக்கில் இந்த எரிபொருள் தொகுதி வழங்கப்பட உள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோர்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியா ஊடாக இந்த எரிபொருள் தொகுதியை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இலங்கைக்கு வழங்க உள்ளது.
இதேவேளை, எப்பொழுது இந்த எரிபொருள் இலங்கையை வந்தடையும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.