வவுனியாவில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விசேட ஆராதனை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டாவது வருடம் பூர்த்தியாகும் நிலையில் அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவு கூர்ந்து அதற்கான விஷேட பிரார்த்தனை இன்று வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பின் பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வேண்டி வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் இன்று அதிகாலை அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது தேவாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
