ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் அரசாங்க கடன்தொகை அதிகரிக்கப் போவதில்லை! மத்திய வங்கி ஆளுநர்
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்தொகை ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பதற்குக் காரணம் அல்ல என்றும், வெளிநாட்டுக் கடன் ஒரு டொலர் கூட அதிகரிக்காது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடனை ரூபாயில் அல்லாமல் டொலரில் அளவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகில் எந்த நாடும் தனது வெளிநாட்டுக் கடனைத் தனது சொந்த நாணயத்தில் அளவிடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
டொலரின் மதிப்பு
மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்ற நிதிக் குழுவில் பங்கேற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வங்கி ஆளுநர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, 'டொலரின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக நாட்டின் கடன் சுமை 1.8 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாத கடன் தொகையுடன் ஒப்பிடும்போது நாட்டின் கடன் தற்போது 4.2 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது. அந்தக் கடன்களிலிருந்து எந்தப் புதிய சொத்துக்களும் வரவில்லை' என்று சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க, இந்தக் கூற்றை நான் முன்பே கேட்டிருக்கிறேன். ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் குறையும்போது அரசாங்கத்தின் கடன்சுமை 30 பில்லியன் ரூபாய் அதிகரிக்கிறது என்ற இந்தக்கூற்று, முழுமையான சித்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
டொலர்களில் உள்ள அரசாங்கத்தின் கடனில், ரூபாயின் மதிப்பு சரிவதால் ஏற்படும் தாக்கத்தைத்தானே நீங்கள் கவனிக்கிறீர்கள்?
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, 'ஒரு தனியார் வங்கியின் இலாபங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் போதும், அதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்போதும் மட்டுமே நீங்கள் அந்த வாதங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.'

வங்கித் துறையில் ரூபாய்க்கும் டொலருக்கும் இடையில் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்த, வங்கிகள் டொலரில் அதிக முதலீடு செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன்.
அது ஒரு தனி விஷயம். அதற்குத் தனிப் பதில் உண்டு. ஆனால்இ நாட்டின் கடன் சுமையின் மீது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு கதை. உதாரணமாக, நாட்டின் வெளிநாட்டுக் கடன் இருப்பை எடுத்துக் கொண்டால், அது 30 பில்லியன் அது டொலர்கள் ஆகும்.
அதன் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தாலும், அந்த முப்பது பில்லியன் டொலர் கடன் மாறாது. கடன் ஒரு டொலர் கூட அதிகரிக்காது. நாம் அதை ரூபாயில் கணக்கிடும்போது, கடன் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.
ஆனால் அதை டொலர்களில் எடுத்து ரூபாயில் அளவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் அந்த டொலர்களில் கடன் வாங்கினால், அதை டொலர்களில் மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டும். அரசின் வருமானமும் செலவும் சமநிலையில் இருக்க வேண்டும்.
அரசின் வருமானத்தின் பெரும்பகுதி பெறுமதிசேர் வரி (VAT) மற்றும் இறக்குமதி வரிகளிலிருந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு குறையும்போது, டொலர்கள் தொடர்பான வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் மூலம் அரசின் ரூபாய் வருமானம் அதிகரிக்கிறது. அதனால்தான் நான் வெளிநாட்டுக் கடன் என்று கூறுகிறேன்.
உலகில் எங்கும் 'ஒரு நாடு தனது வெளிநாட்டுக் கடனைத் தனது சொந்த நாணயத்தில் அளவிடுவதில்லை. அரசாங்கக் கடன் ரூபாயில் அல்ல, டொலர்களில் அளவிடப்பட வேண்டும்.' என்றும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri