மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களை கூட நடைமுறைப்படுத்தாத இலங்கை

Sri Lanka Mullaitivu Disabled People
By Independent Writer Dec 03, 2021 07:31 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

 இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களும், கொள்கைகளும் மிகவும் குறைவாகவே காணப்பட்டாலும் அவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாத அவல நிலையே இலங்கையில் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினரால் இன்று (03) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமுறைகள் மற்றும் கொள்கை வரைபுகள் போதுமானதா என்பது விவாதிக்கக்கூடிய ஒரு விடயமாகவே உள்ளது.

இலங்கையில் சட்டங்களிலும், கொள்கைகளிலும் சமூக உள்வாங்கலினை கருத்திற் கொண்டு சில மாற்றங்களை கொண்டுவர முல்லைத்தீவு மாவட்ட அமரா, சமாச ஒன்றியத்தினராகிய நாம் பின்வரும் சிபார்சுகளினை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடையோருக்கும் முன்வைக்கின்றோம்.

1.மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் முன்னுரிமைப்படுத்தப்பட       வேண்டும்.

2.அவர்களுக்கான புதிய கொள்கைகள் நடைமுறைக்கேற்ப வரையப்பட வேண்டும். அவை சட்டங்களாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3. பெண் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவை அணுகப்பட வேண்டும்.

4. இன்று உலகம் கவனம் செலுத்தும் முக்கியமானதோர் விடயம் சமூகத்தில் வாழும் அனைவருக்கும் எதுவித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களுக்கான மாண்பினையும் வழங்குவதாகும். மாற்றுத்திறனாளி நபர்களும் சமூகத்தில் சமமான உரிமைகளை அனுபவிக்க உரிமையுடையோர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்.

5. அரசினது கல்வி தொழில்வாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை அதிகரித்து ஊக்குவிப்பு வழங்குவதுடன் அவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

6.மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தமான தொழிற் பயிற்சிகளையும் வளங்களையும் வழங்கல்.

7.அரைமானிய வாழ்வாதாரத் திட்டங்களினை விடுத்து மாற்றுதிறனாளிகள் தாமாகவே பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் வாழ்வாதாரத் திட்டங்களை வழங்கல்.

8. சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கள் மாற்றுத்திறனுடன் கூடிய மக்களைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்.

9. மாற்றுதிறனுடையவர்கள் இலகுவாக சேவைகளை அணுகக்கூடியவாறான வசதிகள் மற்றும் முன்னுரிமைப்படுத்தல்களினை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

10. மாற்றுதிறனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உதவிகளினை வழங்குவதனை விடுத்து மாற்றுத்திறன் உடையவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரத் திட்டங்களை வழங்க வேண்டும்.

11.அவர்கள் அரசியலில் போட்டியிடவும் சமூக மட்ட அமைப்புக்களில் தீர்மானமெடுக்கும் பதவிகளில் போட்டியிடவும் இடம் அளிக்கப்பட வேண்டும்.

12. அவர்களது சுகாதாரத் தேவைகள் கவனத்திற்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான பிரத்தியேகத் தன்மை கருதி உரிய மருத்துவப் பொதிகள் வழங்குவதற்குரிய ஒதுக்கீட்டினை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக ஏற்பாடுகளினைச் செய்து தரல் வேண்டும். (மாதவிடாய் துவாய்கள், பம்பர்ஸ், கலீற்றர் மற்றும் பிற)

போன்ற  கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US