இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

Eran Wickramaratne Government Employee Sri Lankan Peoples
By Dhayani Feb 25, 2026 10:53 AM GMT
Report

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (25) இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்குரேகொட இரட்டைக்கொலை! இரண்டாவது துப்பாக்கித்தாரி கைது

அக்குரேகொட இரட்டைக்கொலை! இரண்டாவது துப்பாக்கித்தாரி கைது

தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தனிநபரின் அடையாளத்தை 100 சதவீத துல்லியத்துடன் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல் | Sri Lanka Digital Id Card Be Issued This Year 

நாட்டில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்த 2012 முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இருப்பினும், தற்போதைய நிர்வாகத்தின் முதல் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, கொள்முதல் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கொள்முதல் செயல்முறையை முடித்து, ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முறைகேடுகளை தடுக்க திட்டம்

தற்போது பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் எந்த இடத்திலும் அவர்கள் யார் என்பதை துல்லியமாக நிரூபிக்க முடியும். இது அரசு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல் | Sri Lanka Digital Id Card Be Issued This Year 

இந்தப் புதிய முறையை செயல்படுத்துவதன் மூலம், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டிய அவசியம் பெருமளவில் குறையும்.

நிதி மோசடி, திருட்டு மற்றும் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் செய்யப்படும் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும் இது பயன்படும் என்றும் அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

இந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் அறிமுகம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  

வங்கிகணக்கு இல்லாததால் பெருந்தொகை பணத்தை இழக்கும் 16,800 பேர்! அனுப்பப்பட்ட அவசர குறுஞ்செய்தி

வங்கிகணக்கு இல்லாததால் பெருந்தொகை பணத்தை இழக்கும் 16,800 பேர்! அனுப்பப்பட்ட அவசர குறுஞ்செய்தி

 

மாகந்துரே மதுஷ் மரணத்தில் தொடரும் மர்மம்! அரசியல்வாதிகள் பலருக்கு மீண்டும் பெரும் சிக்கல்

மாகந்துரே மதுஷ் மரணத்தில் தொடரும் மர்மம்! அரசியல்வாதிகள் பலருக்கு மீண்டும் பெரும் சிக்கல்

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US