இலங்கை, சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் காட்சிக் குழந்தை! சர்வதேச ஊடகத்தின் கணிப்பு!
சீனாவின் "கடன் பொறி இராஜதந்திரம்" என்று அழைக்கப்படும் காட்சிக் குழந்தையாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மோசமான நிதி நெருக்கடிக்கு மத்தியில் எளிதாக கடன்களை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளை தர்க்கரீதியாக சீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ளதாக ரொயட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளிடமோ அல்லது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கையின் ஜனாதிபதி விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு டிசம்பரில் 3.1 பில்லியன் டொலர்களாக இருந்தது,
இந்தநிலையில் இலங்கை 2022, ஜனவரி 18 ஆம் திகதி, 500 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தையும், 1 பில்லியன் டொலர்களை ஜூலையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
அத்துடன் 2025 வரையிலான கடப்பாடுகளும் அதிகமாக உள்ளன. இதனைக் கருத்திற்கொண்டே, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது நாட்டின் மோசமான நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்க உதவுமாறு சீனாவிடம் கேட்டுக்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை இந்த ஆண்டு மாத்திரம் 4.5 பில்லியன் டொலர்களை கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
