வன்புணர்வுக்கு உள்ளாகும் மாணவர்கள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Kalutara Child Abuse Sri Lankan Schools
By Vethu Jul 08, 2023 02:28 AM GMT
Report

அளுத்கம சுற்றுலாத் தலமொன்றில் பல தடவைகள் மது அருந்திவிட்டு 4 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14, 15 மற்றும் 16 வயதுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அதிபர் அளுத்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு பாடசாலை மாணவர்களும் சந்தேக நபர்களும் சில காலமாக பேஸ்புக் மற்றும் டிக்டொக் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.

வன்புணர்வுக்கு உள்ளாகும் மாணவர்கள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Child Abuse Sri Lanka Police

மாணவர்களின் நடவடிக்கை

இந்த மாணவர்கள் பல சந்தர்ப்பங்கள் அளுத்கம கங்கபட வீதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கு அதிகளவில் மதுபானம் கொடுத்து மயக்கமடைந்தவுடன் 4 மாணவர்களையும் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த மாணவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி மாணவர்களிடம் கேட்ட போது இது தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியவந்துள்ளது.

வன்புணர்வுக்கு உள்ளாகும் மாணவர்கள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Child Abuse Sri Lanka Police

அதன்படி, அளுத்கம பிரதேசத்தில் வைத்து 45 மற்றும் 39 வயதுடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கையடக்க தொலைபேசிகளையும் சோதனையிட்ட போது குறித்த காணொளி காட்சிகளில் இந்த மாணவர்களும் இருந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

நான்கு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். இதன்போது எல்லாவற்றையும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சட்ட வைத்திய பரிசோதனை

சில தினங்களில் இந்த மாணவர்கள் பாடசாலையில் வகுப்புகளை தவிர்த்து விட்டு சந்தேக நபர்களுடன் சுற்றித்திரிவதும் தெரியவந்துள்ளது.

வன்புணர்வுக்கு உள்ளாகும் மாணவர்கள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Child Abuse Sri Lanka Police

இவர்களில் மூன்று மாணவர்கள் அளுத்கம பொலிஸ் எல்லைக்குட்பட்டவர்கள் இன்னொருவர் பெந்தோட்டை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

பொலிஸ் காவலில் உள்ள நான்கு மாணவர்களும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US