பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்! அதிரடி காட்டிய பொலிஸார்
பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் மடிக்கணினிகளை திருடிய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து அளுத்கம, களுத்துறை மற்றும் பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் பேருந்துகளிலும் கரையோர ரயிலில் பயணிக்கும் ரயில்களிலும் பயணித்த பயணிகளின் மடிக்கணினிகளை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருட்டு சம்பவங்கள்
இவ்வாறு பல மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீண்டகாலமாக மிக நுணுக்கமாக இந்த திருட்டுக்களை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை, ஹல்தொட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட 07 மடிக்கணினிகள் மற்றும் 05 கையடக்கத் தொலைபேசிகள் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
