ஆபத்தான கட்டத்தில் இலங்கை - சுகாதார பிரிவு எச்சரிக்கை
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இன்றுவரை மக்களின் நடத்தையை கருத்தில் கொள்ளும் போது அடுத்த சில வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையில் புத்தாண்டின் விடியலில் கூட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
புத்தாண்டில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் மக்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக காணப்பட்டது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகமாக பயணங்களை மேற்கொள்வார்கள்.
இவ்வாறான நிலையில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
எப்படியிருப்பினும் எதிர்வரும் 2 வாரங்கள் நாட்டில் மிகவும் தீர்மானமிக்க நிலைமை உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.