இரும்பு கரம் கொண்டு போராட்டக்காரர்களை ரணில் அடக்குவதற்கு வாய்ப்பு! புலனாய்வுச் செய்தியாளர் (Video)
நாளை 20ஆம் திகதி போராட்டம் சூடுபிடிக்குமானால் கொழும்பு வீதிகளில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படுவதுடன், கொழும்பு மாநகரம் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் அடைக்கப்படுவார்கள் என்ற எதிர்வுக்கூறலை புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரும்பு கரம் கொண்டு போராட்டக்காரர்களை ரணில் அடக்குவதற்கு வாய்ப்பு அதிகமான காணப்படுகின்றது. முப்படையினருக்கும் சூடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனேகமாக துப்பாக்கி முனையில் போராட்டம் அடக்கப்படலாம். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.



