இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்
கொரியாவில் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பும் வழியில், சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் மலேஷியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஆளுநரும் தனது நெருங்கிய நண்பருமான ரான்சிறி மொஹ்ட் அலிருஸ்தானை அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு


மலாக்கா மாநிலத்தில் இலங்கையின் கலாசார நிலையம் ஒன்றை நிறுவுதல், இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தல்

இதேவேளை, இலங்கையில் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதற்கு
மலேசியாவின் ஒத்துழைப்பு பெறுவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan