இலங்கையில் விமான டிக்கெட்டுக்களின் விலை குறைகிறது!
டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமான டிக்கெட்டுக்களின் விலையும் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை
டொலர் விலை குறைவினால் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு இலங்கையில் உள்ள விமான நிறுவன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைவடைந்துள்ள நிலையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதாகவும், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan