இலங்கை விமானப் படையின் பயிற்சி விமான விபத்தை விசாரிக்க விசேட புலனாய்வுக் குழு நியமனம்
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான கே 8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று இன்று(21) காலை விபத்துக்குள்ளானது.
கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் குருநாகல் - வாரியபொல பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானப் படை அறிக்கை
விபத்து இடம்பெற்ற நேரத்தில் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர் எனவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் எனவும் விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி விமான விபத்து தொடர்பில், இலங்கை விமானப் படை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் உள்ள இலங்கை விமானப் படையின் எண் 5 போர் படைக்கு நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் கே 8 விமானம், இன்று வௌ்ளிக்கிழமை காலை குருநாகல் - வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகலில் உள்ள பதேனியா மினுவன்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.
விபத்து
இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானி மற்றும் பயிற்சி விமானி அதிகாரி ஆகியோர் பயணித்துள்ளனர்.
மேலும் இந்த அதிகாரிகள் குருநாகல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் இன்று காலை 7.27 மணியளவில் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு, காலை 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, விபத்து குறித்து விசாரணை நடத்த பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தார்" - என்றுள்ளது.

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ Cineulagam

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
