கோர விபத்தில் தந்தையும் 10 வயது மகனும் பரிதாப மரணம்
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு(20) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய தந்தையும், 10 வயதுடைய மகனும் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே மரணம்
பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மகனை மோட்டார் சைக்கிளில் தந்தை ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் பயணித்த வேளையிலேயே கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 10 வயது சிறுவன் இவ்வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்குச் சென்றிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
