நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு மக்களை அழைத்துள்ள அநுர
சமூக, பொருளாதார, கலாசார சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒரே போராட்ட பூமியில் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன்போது நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திரதின உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் வளமான ஒரு எதிர்கால அரசையும் நவீன இலங்கை தேசத்தையும் கனவு கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்து என்றும் அவர் குறிப்பிட்டார்.




























HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
