தமிழ் தேசிய கட்சிகளுக்கு சிறிநேசன் அழைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டமைப்பாக போட்டியிடுவதை நாங்கள் விரும்புகின்றேம். இதுவே மக்களின் விருப்பமுமாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை வளர்ப்பதற்குரிய நோக்கமுடையவர்களாக இருக்க கட்சியை சிதைப்பதற்குரிய நோக் கமுடையவர்களாகத்தான் இருப்பார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று காலை (27.09.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகள்
தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் ஒரு கட்சியாக தேர்தலில் முகம் கொடுக்க வேண்டும் எனும் கருத்தினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சொல்லியிருக்கின்றார்.
உள்ளூராட்சி தேர்தலில் மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தனித் தனியாக போட்டியிட்ட பின்னர் இணைகின்ற பட்சத்தில் அதிகமான சபை ஆசனங்களை பெற முடியும் என்றும் அதன் மூலமாக சிறிலங்கா தேசிய கட்சிகளை இணைத்துக்கொள்ளாமல், தமிழ் தேசிய கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு இந்த சபைகளை கைப்பற்றி பலமாக கொண்டு செல்லலாம் என செல்லப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தலுக்கு மட்டும்தான் இந்த நடைமுறை சொல்லப்பட்டது.
ஏனைய மாகாண சபை தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து போட்டியிடுவதுதான் தமிழ் தேசிய கட்சிகளின் விருப்பம். தற்போது இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது.
தொழிலாளர் நலன் தொடர்பாகவும் ஏழை மக்களின் நலன் பற்றி சிந்திக்கின்ற கட்சி ஆட்சிக்கு வந்திருக்கின்றது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |