மீண்டும் அச்சுறுத்தவுள்ள அடுத்த வகை கோவிட் வைரஸ் குறித்து அச்சம் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்
நியூயோர்க்கில் எலிகள் உடலில் ஒரு வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வகை மரபணு மாற்ற கோவிட் வைரஸ் எலிகளிடமிருந்து பரவலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளிடம் கோவிட் காணப்படுவது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். காரணம், அது விலங்குகளிடம் பரவுவது கவனிக்கப்படாமலே விடப்பட்டு, பின்னர் புதிய ஒரு வகை கோவிட் வைரஸாக மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது.
ஆய்வாளர்கள் எலிகளின் அச்சத்தை ஆய்வுக்குட்படுத்திய போது, அவற்றில் கோவிட் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
சாக்கடையிலிருந்து அந்த எலிகளுக்கு கோவிட் வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
எலிகள் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து, மனித மலத்தை உண்ணுவதால் அவற்றிற்கு மனிதர்களிடமிருந்து கோவிட் பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
தாங்கள் சாக்கடையில் இதுவரை உயிருள்ள கோவிட் வைரஸைக் கண்டறியவில்லை என்றாலும், சாக்கடை நீரின் அளவையும் எலிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிடும் போது அவை அங்கிருந்து தான் கோவிட் வைரஸைப் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நியூயோர்க்கில் காணப்படும் இந்த எலிகளிடமிருந்து தான்
அடுத்த வகை கோவிட் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என தாங்கள் நம்புவதாக
தெரிவித்துள்ளனர்.