பொன் அணிகளின் போர் சமநிலையில் நிறைவு!
“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையான 109 ஆவது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
துடுப்பாட்டப் போட்டியில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம்(12.03.2026) ஆரம்பமானது.
அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்
40 ஓட்டங்களை பெற்று நிறைவு
முதல் நாள் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி களத்தடுப்பினை தெரிவுசெய்ய வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.
யாழ்ப்பாணக்கல்லூரி முதல்நாள் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து176 ஓட்டங்களை பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றதுடன், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 3 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றநிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாம் இன்னிங்சினை இன்று (14) தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் டிக்களே முறையில் ஆட்டத்தினை முடித்துக்கொண்டது.
ஆரம்பமான இரண்டாம் சுற்று
இன்று இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 4 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி அணியின் எஸ்.கே.ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இதுவரை நடந்த 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக்கல்லூரி 17 தடவைகளும் வெற்றிபெற்றன. 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.


விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri