மக்களின் நலன்கருதி இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்
புத்தாண்டு்காக சொந்த ஊர்களை நோக்கி பயணித்த மக்கள் மீள கொழும்பு திரும்புவதற்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலதிகமாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணாஹங்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலே இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிற்கு பிரவேசிக்கவுள்ள பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் தூர இடங்களில் இருந்து தலைநகருக்கான ரயில் சேவைகள் வழமைபோல இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை(19) முதல் சகல தொடருந்து சேவைகளும் வழமை போல இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam