மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! இந்திய பெருங்கடல் குறித்து ரணில் வழங்கியுள்ள முக்கிய ஆலோசனை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களையும், அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களையும் குறைக்க, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத் தலைவர்களுடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடுவது முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பதற்ற நிலைமை உட்பட பல பிரச்சினைகள் குறித்து சிறப்பு அறிக்கையை வெளியிட்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கு போர்
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை குண்டுவீசித்தாக்கி வருகின்றன. மறுபுறம், ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்கி வருகிறது.
கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டிய நமது கடல் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலின் மூலம் அமெரிக்கா ஈரானிய கப்பலை மூழ்கடித்து வருகின்றது.
இதற்கிடையில், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் உரையாடலில் ஈடுபட்டு வருகின்றது. ஐரோப்பிய நாடுகளும் ஒன்றுக்கொன்று உரையாடலை நடத்தி வருகின்றன.
இந்தியப்பெருங்கடல் விவகாரம்
இருப்பினும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இவ்வாறான கலந்துரையாடல்கள் காணப்படவில்லை. பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் சந்தித்து அரசியல் விவகாரங்கள், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மீன்பிடி, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா இன்று உலகளாவிய விவகாரங்களில் இருந்து விலகி மறுபுறம், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். "அங்கு, பிராந்திய நாடுகள் விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் ஒற்றுமையை எவ்வாறு உருவாக்குவது என்பதை ஆராய முடியும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri