கணேமுல்ல சஞ்சீவவின் கொலை! நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இணைப்பு
அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் (Jammer) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் (Jammer)பொருத்தப்பட்டுள்ள நிலையில், கட்டடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முழுமையாக முடக்க முடியவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜாமர்களின் குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளி தரப்பினருடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு
சிறைச்சாலைகளில் தங்கியிருந்து கைதிகள் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளை சீரமைக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கும் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பூஸ்ஸ போன்ற தீவிர சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 28 சிறைகள் உள்ளன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைகள். அந்த 28 சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500. அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
