நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,479 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(3) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 23 பேரும், சந்தேகத்தின் பேரில் 748 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 210 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 110 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 25 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3,202 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
